Home > OUR PROGRAMMES > Departments > Mother Tongue (Tamil) > Programmes

Programmes

சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் 2015


Children's Day Celebrations 2015

வண்ண வண்ண எழுத்துக்கள்!


தொடக்கநிலை 3ஆம் வகுப்பு மாணவர்கள் கிரந்த எழுத்துக்களை வண்ணம் தீட்டுதலின் வழி கற்றுக்கொண்டார்கள். கிரந்த எழுத்துக்களின் வளைவுகளை அறிந்துகொள்வதற்கும் அவற்றை வடிவம் சிதையாமல் எழுதுவதற்கும் இந்நடவடிக்கை மாணவர்களுக்குப் பெரிதும் துணை புரிந்தது. மொத்தத்தில், மாணவர்கள் இந்நடவடிக்கையில் சந்தோஷத்துடனும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டதற்கு இப்புகைப்படங்கள் ஆதாரங்களாக அமைகின்றன அல்லவா? 


Learning of Alphabets via Painting

''கதை சொல்வோம்!'' ~ இன நல்லிணக்க நாள்


இன நல்லிணக்க நாள் அன்று தொடக்கநிலை 3ஆம் மாணவர்கள் கதை சொல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பயிற்றுவிப்பாளர் திரு புனிதனின் வழிகாட்டுதலால், ஒவ்வொரு மாணவரும் வகுப்பின் முன் வந்து தன்னம்பிக்கையுடன் தங்கள் படைப்புகளைப் படைத்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். அதோடு, மாணவர்கள் இன நல்லிணக்க நாளை முன்னிட்டு, பாரம்பரிய உடைகளில் வந்திருந்த காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது என்றும் சொல்லலாம். 

Story Telling ~ Racial Harmony Day

எழுத்துக்கள் கற்போம்!


தொடக்கநிலை 2ஆம் வகுப்பு மாணவர்கள் 'ஐ' எழுத்தைக் கற்பதில் அதிக ஈடுபாடு காட்டினர். மாவில் எழுத்தை எழுதிப் பழகுவது அவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாய் அமைந்தது. 

அதோடு, புதிதாகக் கற்ற எழுத்துக்களைக் கொண்டு அதன் தொடர்பான சொற்களை எழுதிப் பழகும் முயற்சியிலும் குமாரி மீரா மாணவர்களை ஈடுபடுத்தினார். எழுத்துக்களைக் கற்றுக்கொள்வதோடு குழு நிலையிலும் மாணவர்கள் ஒற்றுமையாகச் செயல்பட முடியும் என்பதையும் இப்புகைப்படங்கள் காட்டுகின்றன.

Lets Learn Alphabets!